ஆன்மிகம்
ஈரோடு கொங்கலம்மன் கோவில்

ஈரோடு கொங்கலம்மன் கோவில் தேர்த்திருவிழா 28-ந்தேதி நடக்கிறது

Published On 2021-01-21 03:12 GMT   |   Update On 2021-01-21 03:12 GMT
ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை கோவில் பூசாரிகள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து மூலவர் எதிரில் உள்ள கோவில் கொடிமரத்தில் கோவில் பூசாரிகள் திருவிழா கொடியேற்றினர்.

அதைத்தொடர்ந்து மாலையில் அம்மன் உள் பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 26-ந்தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News