தொழில்நுட்பம்
பிளே ஸ்டேஷன்

இனி இந்த கன்சோலுக்கு கிடையாது - சோனி அதிரடி

Published On 2021-03-30 11:57 GMT   |   Update On 2021-03-30 11:57 GMT
சோனி நிறுவனம் தனது கேமிங் கன்சோலுக்கு இனி இந்த சேவை கிடைக்காது என தெரிவித்து இருக்கிறது.


சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 மற்றும் வீடா கேம் கன்சோல்களுக்கு பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்3 சாதனத்தில் ஜூலை 2 ஆம் தேதியும், வீட்டா சாதனத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவை கிடைக்காது.

புது அறிவிப்பு காரணமாக பிஎஸ்3 மற்றும் வீட்டா சாதனங்களுக்கான கேம்களை டிஜிட்டல் வடிவில் பயனர்களால் இனி வாங்க முடியாது. 



`பிளே ஸ்டேஷன் 3 கன்சோல்களுக்கு ஜூலை 2, 2021 மற்றும் பிளே ஸ்டேஷன் வீட்டா கன்சோல்களுக்கு ஆகஸ்ட் 27, 2021 ஆம் தேதியுடன் பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவையை நிறுத்துகிறோம். மேலும் பிஎஸ்பி அதாவது பிளே ஸ்டேஷன் போர்டபில் விற்பனையையும் ஜூலை 2, 2021 ஆம் தேதியுடன் நிறுத்துகிறோம்.' என சோனி தெரிவித்து உள்ளது.

சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 கன்சோலை நவம்பர் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை இந்த கன்சோல் சுமார் 8 கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிளே ஸ்டேஷன் வீட்டா மொத்ததில் ஒரு கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
Tags:    

Similar News