ஆன்மிகம்
தலைக்காவிரி பாகமண்டலேஸ்வரா கோவில்

தலைக்காவிரி பாகமண்டலேஸ்வரா கோவில் இன்று முதல் திறப்பு

Published On 2020-08-14 04:59 GMT   |   Update On 2020-08-14 04:59 GMT
தலைக்காவிரி பாகமண்டலேஸ்வரா கோவில் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டு, வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் 56 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 14 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மடிகேரி தாலுகா தலைக்காவிரி அருகே பிரம்மகிரி மலைப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அர்ச்சகர் நாராயணா ஆச்சார் வீடு உள்பட 2 வீடுகள் மண்ணில் புதைந்துபோனது. இதில் நாராயண ஆச்சார், அவரது சகோதரர் ஆனந்ததீர்த்த ஆச்சார் உள்பட 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இதில் நாராயண ஆச்சார், ஆனந்ததீர்த்த ஆச்சார் ஆகியோரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்களின் உடல்கள் மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால், தலைக்காவிரியில் உள்ள பாகமண்டலேஸ்வரா கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கோவில் மூடப்பட்டது. இந்த நிலையில் குடகில் மழை குறைந்ததைதொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது.

இதைதொடர்ந்து கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர் வடியத் தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று கோவில் முழுவதும் ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோவில் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டு, வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று கலெக்டர் அனீஸ் கண்மணி ஜாய் கோவிலில் ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News