செய்திகள்
கோப்புப்படம்

காரில் தனியாக சென்றாலும் முகக்கவசம் அவசியம்: டெல்லி கோர்ட் அதிரடி

Published On 2021-04-07 05:59 GMT   |   Update On 2021-04-07 05:59 GMT
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

காரில் தனியாக சென்ற சில நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு பேர் இந்த நடைமுறைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.



அப்போது வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ‘‘காரை தனியாக ஓட்டிச் சென்றாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம். மாஸ்க் சட்டம் சுரக்சா கவாச் கொரோனா பரவலை கண்டிப்பாக தடுக்கும். பொது இடம் என்பதால், காரில் ஒருவர் இருந்தாலும் கூட மாஸ்க் அணிய வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது,
Tags:    

Similar News