செய்திகள்
கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள்

கொரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தில் இதுவரை 21 டாக்டர்கள் உயிரிழப்பு

Published On 2021-06-02 04:07 GMT   |   Update On 2021-06-02 04:07 GMT
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரசின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக பரவியதுடன், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.  குறிப்பாக மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கடும் சவாலை சந்திக்கின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் இடைவிடாமல் பணியாற்றும் மருத்துவர்கள், உயிரிழப்பது அதிகரித்தவண்ணம் உள்ளது. முதலாவது கொரோனா அலை பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.



இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள பதிவேட்டின்படி, அதிகபட்சமாக  டெல்லியில் 107 டாக்டர்கள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளனர். பீகாரில் 96 டாக்டர்களும், உத்தர பிரதேச்ததில் 67 டாக்டர்களும், தமிழகத்தில் இதுவரை 21 டாக்டர்களும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News