ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவம் நடந்த காட்சி.

திருவண்ணாமலையில் இன்று பிடாரி அம்மன் உற்சவம்: பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றம்

Published On 2021-11-08 07:16 GMT   |   Update On 2021-11-08 07:16 GMT
திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று தீபத் திருவிழாவை முன்னிட்டு எல்லை தெய்வமான துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பின்னர் துர்க்கையம்மன் உற்சவமூர்த்தி பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நாதஸ்வர இசையுடன் மேளதாளம் முழங்க பெட்ரோமாஸ் விளக்குகளுடன் நடைபெற்ற அம்மன் பிரகார உலா பக்தர்கள் மனதைக் கவர்ந்தது.

முன்னதாக கோவில் சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகளை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் பல்லக்கில் வலம் வந்தஅம்மனை வணங்கி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர்.

இதையொட்டி ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, டி.எஸ்.பி. அண்ணாத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News