உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தபால் நிலையங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி

Published On 2022-01-12 05:20 GMT   |   Update On 2022-01-12 05:20 GMT
பார்க்கிங் பகுதி, கேன்டீன் பகுதிகளில் கூட்டம் சேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருப்பூர்:

தபால் நிலையங்களில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என தபால்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தபால்துறை உதவி இயக்குனர் தபால் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்:

கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பின்னர், முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியுடன் மட்டுமே தபால் அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும். ஆலோசனை கூட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேற்கொள்ளவும். இருப்பிடத்தை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். 

பார்க்கிங் பகுதி, கேன்டீன் பகுதிகளில் கூட்டம் சேராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கலாம். 

அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தியிருக்க வேண்டும். இக்கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.
Tags:    

Similar News