செய்திகள்
தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 90 சதவீத எல்லை பகுதிகளை கைப்பற்றி விட்டோம்- தலிபான்கள் அறிவிப்பு

Published On 2021-07-23 10:33 GMT   |   Update On 2021-07-23 10:33 GMT
ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான், ஈரான், கஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகள் உள்ளன.
காபூல்:

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்கா மற்றும் அதன் நேசநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றன. அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து படைகளும் முற்றிலும் வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் வாபஸ் ஆவதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டை மீண்டும் கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் 400 மாவட்டங்கள் உள்ளன. இதில் 200 மாவட்டங்கள் வரை தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதலாவதாக ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதிகள் முழுவதையும் கைப்பற்ற அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான், ஈரான், கஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகள் உள்ளன. இதில் கஜிகிஸ்தான் எல்லை முழுவதையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிவிட்டனர். உஸ்பெகிஸ்தானின் பெரும் பகுதி அவர்கள் வசம் உள்ளது.

90 சதவீத எல்லைப் பகுதிகளை கைப்பற்றிவிட்ட தாக தலிபானின் செய்தி தொடர்பாளர் முஜாகித் தெரிவித்துள்ளார். ‘‘ஒட்டுமொத்த எல்லை பகுதி முழுவதையும் நாங்கள் விரைவில் கைப்பற்றிவிடுவோம்.

அதன் பிறகு நாடு முழுவதும் எங்கள் வசம் வரும். பிறகு நாடு முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.

அதே நேரத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் செயல்பட அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக ஐ.எஸ். அமைப்புக்கு ஆப்கானிஸ்தானில் இடம் அளிக்க முடியாது’’ என்று கூறி உள்ளார்.


Tags:    

Similar News