ஆன்மிகம்
ரெங்கநாதரிடமிருந்து தங்கைக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி

ரெங்கநாதரிடமிருந்து தங்கைக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி: சமயபுரம் கோவிலில் இன்று நடையடைப்பு

Published On 2021-01-28 06:36 GMT   |   Update On 2021-01-28 06:36 GMT
மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கத்தில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு இன்று மதியம் 3.30 மணியளவில் சமயபுரம் கோவில் நடையடைக்கப்படும். மறுநாள் காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றிக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், சந்தனம், தாம்பலம், மாலைகள், அலங்காரம் எனப்படும்தளிகை வகையறாக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று மாரியம் மனுக்கு சமர்பிப்பதுவழக்கம்.

அந்த வகையில் நாளை தைப்பூசம் என்பதால்காலை யிலேயே சமயபுரம்கோவிலில் இருந்து உற்சவர் அம்பாள் கண்ணாடி பல்லக்கில் புறப் பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளிய வாறு ஸ்ரீரங்கம் வருகிறார். இன்று மாலை ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் எழுந்தருளுவார். அங்கு அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப்பின் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தீர்த்தவாரிக்கென கொள்ளிடம் ஆற்றுக்குவரும் மாரியம்மனுக்கு சமர்பிக்க இன்று இரவு ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மாலைகள், வளையல்கள், அலங்காரம் எனப்படும் தளிகை வகையாறாக்களை யானை மீது வைத்து மேளதாளத்துடன் கொள்ளி டம் ஆற்றில் எழுந் தருளியிருக்கும் அம்பாளுக்கு சீர் வரிசைப பொருட்கள் சமர்ப்பிக்கப்படும்.

இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களு டன் மகாதீபாரதனை நடைபெறும். இதனை முன்னிட்டு அன்று இரவுகிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். அன்னதானம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும்.

மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கத்தில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு இன்று மதியம் 3.30 மணியளவில் சமயபுரம் கோவில் நடையடைக்கப்படும். மறுநாள் காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
Tags:    

Similar News