செய்திகள்
மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைப்பு

Published On 2021-08-13 03:30 GMT   |   Update On 2021-08-14 10:05 GMT
சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள அறை தருமபுர ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மதுரை:

தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் (வயது 77) இருந்து வருகிறார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  அவரது உடல்நிலை நேற்று காலை திடீரென மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.



இந்நிலையில் 293வது ஆதீனமாக குறிப்பிட்டு நித்யானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில்,  மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் பயன்படுத்தி வந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.


சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள அறை தருமபுர ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மதுரை ஆதீனம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நித்யானந்தா மடத்துக்கு உரிமை கோரியதால் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News