உள்ளூர் செய்திகள்
போராட்டம்

மறைமலைநகரில் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2022-05-06 07:16 GMT   |   Update On 2022-05-06 07:16 GMT
மறைமலைநகரில் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு:

மறைமலைநகர் அடுத்த பேரமனூர் அருகே கார் தயாரிக்கும் தொழில் சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

மேலும் வருகிற ஜீன் மாதம் 30ந் தேதி தொழிற் சாலையை மூடப்போவதாகவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்த கார் தொழில் சாலையில் புதிதாக எலெக்ட்ரிக் கார் உற்பத்தி உற்பத்தி செய்யப்போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

இதையடுத்து தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கினால் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று நிரந்தர ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை வலியுறுத்தி இன்று காலை ஏராளமான தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி குறித்து தொழிற்சாலை நிர்வாகம் சரியான தகவல் தரவில்லை. ஏற்கனவே வேலை செய்து வரும் எங்களுக்கு வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளதால் யார் இந்த தொழிற் சாலையை வாங்கி கார் உற்பத்தியை தொடங்கினாலும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் கார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News