லைஃப்ஸ்டைல்
குழந்தைகளை வளர்த்தெடுக்கும் கல்வி முறைகள்

குழந்தைகளை வளர்த்தெடுக்கும் கல்வி முறைகள்

Published On 2020-09-04 04:13 GMT   |   Update On 2020-09-04 04:13 GMT
மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.
மழலையர் பள்ளியில் பல்வேறு விதமான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சில முக்கியமான கல்வி திட்ட அணுகுமுறைகள் குறித்து பார்ப்போம்.

மாண்டிச்சேரி

வித்தியாசமான வகுப்பறை, விளையாட்டு வடிவில் பாடத்திட்டம், வயது வித்தியாசம் இல்லாத வகுப்பு தோழர்கள்... என பட்டைய கிளப்புகிறது, மாண்டிச்சேரி கல்விமுறை. உலகம் முழுக்க 20 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிசைதல், காய்கறிகளை வெட்டுதல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற அன்றாட வேலைகளில் இருந்தும் கல்வி கற்பிக்கப்படும்.

வால்டோர்ப்

‘சிந்தனை செய், முயன்று பார், கற்றுக்கொள்’ என்பதுதான் வால்டோர்ப் முறையின் அடிப்படை. அதாவது குழந்தைகளுக்கு எதை கற்பிக்க இருக்கிறார்களோ, அதை பற்றி கற்பித்து, அதை காண்பித்து, அதை உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, இசை, நடனம் போன்றவற்றுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். திங்கட்கிழமை இசை, செவ்வாய் கதை சொல்லுதல் என வகுப்பு ஜாலியாக நகரும்.

பேரண்ட் கோ-ஆப்ரேஷன்

பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதே இந்த கற்றல் முறையின் நோக்கமாகும். பெற்றோர் வகுப்பறையில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் இந்த கற்றல்முறை வழிவகை செய்கிறது. பெற்றோர் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்று பிள்ளைகள் பாடங்களை கவனிப்பதற்கு உதவுகிறார்கள்.

ரெஜியோ எமிலியா

சுய ஒழுக்கம், குழந் தைகளுக்கான பொறுப்புகள், சமூகம் ஆகிய மூன்றையும் மையப்படுத்தும் கல்விமுறைதான் ரெஜியோ எமிலியா. மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகவிட்டு, நட்புறவை வளர்த்து அதன்மூலம் கல்வியை கொண்டு செல்கிறார்கள். செயல்முறை கல்விக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஹைஸ்கோப்

மாணவர்கள் தாங்கள் விரும்பிய திறன்களை அல்லது இலக்கை அடைய தாங்களாகவே திட்டமிடும் கல்விமுறை இது. இளம் மாணவர்களின் தேவைகளையும், கேள்விகளையும் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்றலை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த கல்வி முறை விளங்கும்.

பேங்க் ஸ்டிரீட்

ஒவ்வொருவரின் தனித்துவமான உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் அம்சங்களை வளர்க்கும் வகுப்பறையை உருவாக்குவதே இந்த கல்வி முறையின் நோக்கமாகும். ஒவ்வொரு வயதிலும் நிகழும் உணர்ச்சி மற்றும் அறிவுசார் மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகுவது என்பதையும் குறிப்பிடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள வகையில் கல்வி கற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த மழலையர் கல்வி திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பவை என்று எண்ணி விடாதீர்கள். நம் நாட்டிலும், நமக்கு அருகில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களிலும் இந்த கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது.
Tags:    

Similar News