ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான்

விற்பனையகம் வந்தடைந்த ஆடி எலெக்ட்ரிக் கார் - விரைவில் வெளியீடு?

Published On 2021-06-14 07:58 GMT   |   Update On 2021-06-14 07:58 GMT
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் பென்ஸ் EQC, ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ஆடி நிறுவனத்தின் புதிய இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் கார் நாட்டின் பல்வேறு விற்பனையகங்களுக்கு வந்தைடந்துள்ளது. இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடலாக இ டிரான் வெளியாக இருக்கிறது.

இ டிரான் மாடல் முன்புறம் ஒற்றை பீஸ் பிளான்க்டு-அவுட் கிரில் வழங்கப்படுகிறது. இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இ டிரான் மாடலுக்கான பிரத்யேக டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்ளது. இது டெயில்கேட் முழுக்க நீள்கிறது. 



இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்ப்படுகின்றன. இவை இணைந்து 402 பிஹெச்பி பவர், 664 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-க்கும் அதிக கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.

இந்தியாவில் புதிய ஆடி இ டிரான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
Tags:    

Similar News