செய்திகள்
கோப்புப்படம்

மறுஉத்தரவு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு

Published On 2021-01-13 19:05 GMT   |   Update On 2021-01-13 19:05 GMT
மறுஉத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17-ந் தேதி நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் சமீபத்தில் அறிவித்தார். விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, சொட்டு மருந்து போடப்படும் என்று அவர் கூறினார்.

இப்பணி, 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, நாடு ஆவலுடன் எதிர்பார்த்த கொரோனா தடுப்பூசி போடும் பணி, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

இந்த சூழ்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், ‘‘17-ந் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், எதிர்பாராத பணிகள் காரணமாக, மறுஉத்தரவு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News