செய்திகள்
பஸ்-மினி பஸ் மோதல்

வங்காளதேசம்: பஸ்-மினி பஸ் மோதலில் 10 பேர் உயிரிழப்பு

Published On 2019-11-22 14:11 GMT   |   Update On 2019-11-22 14:11 GMT
வங்காளதேசம் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள முஷிகஞ்ச் மாவட்டத்தில் இன்று திருமண வீட்டாரை ஏற்றிவந்த மினி பஸ் மீது மற்றொரு பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள முஷிகஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட டாக்கா-மாவா நெடுஞ்சாலை வழியாக ஒரு மினி பஸ்சில் திருமண வீட்டார் கேரனிகஞ்ச் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் எதிர் திசையில் வந்த மற்றொரு பஸ் அந்த மினி பஸ் மீது நேருக்குநேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.



இவ்விபத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News