உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பழைய துணிகள், பொருட்களை எரித்தால் சட்ட நடவடிக்கை

Published On 2022-01-13 09:16 GMT   |   Update On 2022-01-13 09:16 GMT
போகிப்பண்டிகையான இன்று பழைய பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரித்துள்ளார்.

திருச்சி:

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாளான இன்று போகி பண்டிகை என்பதால் பழைய பொருட்களை தீயில் எரிப்பதை பொதுமக்கள் நிகழ்ச்சியாகவே கடைபிடிக்கிறார்கள்.

இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து திருச்சி மாவட்டத்திலும் தொடர்ந்து பொதுமக்கள் போகி பண்டிகையன்று பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர்கள் உள்ளிட்டவற்றை தீயில் எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைக்கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெட்சுமி தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ஒலிபெருக்கி மூலம் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் யாரும் பழைய பொருட்கள் துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெட்சுமி கூறியதாவது:&

தொடர்ந்து மாநகர பகுதிகளில் அதிகமாக வாகனங்கள் பயன்பாட்டால் காற்று மாசு படுகிறது. மேற்கொண்டு போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிப்பதால் அதிகமாக புகை ஏற்பட்டு அதுவே விஷ வாயுவாக மாறி பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

ஆகவே இந்த ஆண்டு போகி பண்டிகையில் யாரும் பழைய பொருட்களை தீயில் எரிக்காமல், தேவையற்ற பொருட்களை குப்பை கிடங்கிற்கு அனுப்பி விடலாம்.  அதற்கு  ஏற்றவாறு பொதுமக்களுக்கு கடந்த 2 நாட்களாகவிழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் மாசு அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்த  ஆண்டு குறைந்துள் ளது. மேலும் சட்டப்படி சுற்றுச்சூழல் பாதிப்படையும்படி பழைய பொருட்களை போகி பண்டிகையான இன்று தீயிட்டு எரித்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் துறை சார்பாக அதிகாரிகள் மாநகர் முழுவதும் இன்று சோதனையில் ஈடுபட இருக்கிறார்கள். சுற்றுச் சூழலை பொதுமக்களும் காப்பற்ற வேண்டும்
Tags:    

Similar News