வழிபாடு
கன்னிசாமியும்.... குருசாமியின் கடமையும்..

கன்னிசாமியும்.... குருசாமியின் கடமையும்..

Published On 2021-12-08 08:41 GMT   |   Update On 2021-12-08 08:41 GMT
குருசாமிகளாக இருப்பவர்தான் எல்லா வகையிலும் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
ஐயப்பனின் அருளாலும், தன்னுடைய நெறியான விரத மகிமையினாலும் பல பக்தர்கள் வாழ்வின் மிக உன்னதமான நிலைக்கு வந்துள்ளனர். பகவான் ஐயப்பனுக்கு அடுத்தபடியாக ஐயப்பபக்தர்கள் நினைவு கூருவது அவர்களுக்கு ஐயப்ப பக்தியை அறிமுகப்படுத்தி நல்வழி காட்டும் குருசாமிகளைத்தான்.

குருசாமிகளாக இருப்பவர்தான் எல்லா வகையிலும் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். கன்னிசாமிகளுக்கும் மற்ற சீடர்களுக்கும் ஐயப்பன் பெருமையைப் பற்றியும், சபரிமலை யாத்திரையின் உயர்வை பற்றியும் விரதத்தை நெறியாக முறையாக கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி அவர்களை சரியான வழியில் நடத்திச் செல்ல வேண்டும்.

எந்தவிதமான சுயநலத்துக்கும் உட்படாமல் ஐயப்பனுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் சேவை செய்வது மிகவும் அவசியம். குறைந்தது 10 கன்னிசாமிகளை முறையாக 41 நாட்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க செய்து ஐயப்ப நெறியைப் புரிய வைத்து எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராமல் அவர்களை மட்டும் பிரத்யேகமாக சபரிமலைக்கு அழைத்துச் சென்று வருவது குருசாமியின் கடமையாகும்.
Tags:    

Similar News