விளையாட்டு
அஜாஸ் பட்டேல்

10 விக்கெட் கைப்பற்றிய அஜாஸ் பட்டேலுக்கு சிறப்புப் பரிசு

Published On 2021-12-06 10:59 GMT   |   Update On 2021-12-06 10:59 GMT
வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார்.

மேலும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார்.  மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். 
அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல் வழங்கினார்.
Tags:    

Similar News