ஆன்மிகம்
துறையூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி

துறையூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி

Published On 2021-03-18 07:43 GMT   |   Update On 2021-03-18 07:43 GMT
துறையூர் பருவதராஜக்குலத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசிமகாசிவராத்திரி உற்சவ திருவிழாவில் குட்டிக்குடி நிகழ்ச்சி நடைபெற்றது.
துறையூர் பருவதராஜக்குலத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசிமகாசிவராத்திரி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நறுக்குத்தேர் புறப்பாடு மற்றும் மயானத்தில் மயானக்கொள்ளை நடைபெற்றது. மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஆட்டு குட்டியை உயிருடன் கழுத்தை வாயால் கடித்து ரத்தத்தை மருளாளி குடித்தார். பிறகு ரத்தத்தில் சாதத்தை கலந்து மக்கள் மீது வீசினார்.

மாலை 6 மணிக்கு ஆலயத்தில் உள்ள அம்பாள் குறத்தியாயி வாகனத்தில் எழுந்தருளி அய்யாங்குள மேட்டில் வள்ளால ராஜன் கோட்டை இடித்து பிள்ளை பாவு புறப்பாடு நடைபெற்றது. கடைசி நாள் அம்பாள் சிம்ம வாகனத்தில் மும்மூர்த்திகளுடன் வீபத்திர சுவாமி புறப்பாடு காலை பெரிய திருத்தேர் புறப்பாடு மஞ்சள் நீராடல் நடைபெற்றது.
Tags:    

Similar News