உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பாரப்பாளையம் நொய்யல் ஆற்றில் சிறுபாலம் அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2022-01-12 05:46 GMT   |   Update On 2022-01-12 05:46 GMT
நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் வகையில் 6 இடங்களில் கழிவு நீர் ஓடைகள் உள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இதில் நொய்யல் ஆற்றின் இரு கரைகளும் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. 

அணைமேடு முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரை கரையின் இருபுறத்திலும் கான்கிரீட் சாய்தளம் அமைக்கப்படுகிறது. கரை மீது புதிய சாலை அமைத்தும், பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தியும் மேம்படுத்தும் வகையில் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் வகையில் 6  இடங்களில் கழிவு நீர் ஓடைகள் உள்ளன. இவை ஆற்றின் கரையில் சுத்திகரிப்பு மையம் அமைத்து அதன் மூலம் சுத்திகரிப்பு செய்து தண்ணீர் ஆற்றில் சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் நொய்யல் ஆற்றில் பாரப்பாளையம் பகுதியில் தீபம் பாலத்தை அடுத்து கரை மேம்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் தனியாக கால்வாய் அமைத்து கொண்டு செல்லப்படுகிறது. 

அதே சமயம் சாலையில் சேகரமாகும் மழை நீர் ஆற்றில் செல்லும் வகையில் வடிகாலும், சாலையில் சிறுபாலமும் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த இடத்தில் பிரதான குடிநீர் குழாய் பல அடி ஆழத்தில் செல்கிறது. 

இதனால் அப்பகுதியில் சிறுபாலம் கட்டி மழை நீர் வடிகால் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக பிரதான குழாய் அமைந்துள்ள இடத்துக்கு ஏற்ப மழை நீர் செல்லும் வகையில்  வடிகால் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி தற்போது சிறுபாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News