செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.

காங்கேயத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

Published On 2021-10-27 07:43 GMT   |   Update On 2021-10-27 07:43 GMT
காங்கேயம் காளை சிலைகளுடன் அமைக்கப்பட்ட நுழைவுவாயிலுடன் கூடிய ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிவன்மலை ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
காங்கயம்:

அரசு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கும் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் காங்கயத்தில் உள்ள மதர் தெபொராள் பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.

இதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகமும், வீடு தேடி வரும் திட்டப் பயனாளிகளுக்கு மருந்துப்பெட்டகத்தையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கயம் நகராட்சிப் பகுதியில் 31 பயனாளிகள், வெள்ளகோவில் நகராட்சிப் பகுதியில் 9 பயனாளிகள், குண்டடம் ஊராட்சிப் பகுதியில் 2 பயனாளிகள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதன் பின்னர், காங்கேயம் காளை சிலைகளுடன் அமைக்கப்பட்ட நுழைவுவாயிலுடன் கூடிய ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிவன்மலை ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். 

சிவன்மலை ஊராட்சி அலுவலகம் அருகே சிவன்மலை பகுதியில் சேகரமாகும் மழைநீரை குழாய்கள் மூலம் குளத்தில் சேகரித்து இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் கிராம ஊராட்சிப் பொது நிதியில் இருந்து ரூ.9.76 லட்ச மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பணிகள்.

மேலும் கனிமம் மற்றும் சுரங்கம் சிறுவகை கனிமம் திட்டத்தின் கீழ் ரூ.6.85 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கழிவு நீரை மறுசுழற்சி செய்து, நீர்த் தேக்கத்தொட்டி அமைத்து, மின் மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.  

மேலும் பரஞ்சேர்வழி ஊராட்சியில் 88 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்குமார் தலைமை தாங்கினார்.  

சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், துணை சேர்மன் ஜீவிதா ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணக்குமார், காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமி, காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன்,  வார்டு உறுப்பினர் சிவன்மலை சிவக்குமார் உள்பட  பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வினர், அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலாளர் காளியம்மாள்  நன்றி கூறினார்.
Tags:    

Similar News