தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ பவர் பேங்க் 3

30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 அறிமுகம் செய்த சியோமி

Published On 2020-06-14 12:20 GMT   |   Update On 2020-06-14 12:20 GMT
சியோமி நிறுவனம் 30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.



சியோமி நிறுவனம் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய பவர் பேங்கில் 24 வாட் யுஎஸ்பி டைப்-சி இன்புட், 18 வாட் அவுட்புட் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் கொண்டு சியோமியின் எம்ஐ 10 மற்றும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகபட்சம் 4.5 முறையும், ஐபோன் எஸ்இ 2020 மாடலை 10.5 முறை சார்ஜ் செய்ய முடியும்.

இதில் பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பாடி கொண்டிருக்கிறது. இதில் இரண்டு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் அதிகபட்சம் 18வாட் அவுட்புட் வழங்குகிறது. மேலும் இதில் எல்இடி சார்ஜ் இன்டிகேட்டர்களும், பக்கவாட்டில் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லோவர் பவர் மோட் வழங்கப்பட்டுள்ளது.



இதை கொண்டு எம்ஐ பேண்ட் மற்றும் ஹெட்செட் போன்ற அக்சஸரீக்களை சார்ஜ் செய்ய முடியும். புதிய சியோமி பவர் பேங்க் மாடலை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது. தற்போதைய விதிமுறைகளின் படி விமானங்களில் அதிகபட்சமாக 20000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

சியோமி 30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 169 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 1810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஜூன் 18 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News