ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

முன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்

Published On 2020-10-07 10:16 GMT   |   Update On 2020-10-07 10:16 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய தார் எஸ்யுவி முன்பதிவில் 9 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகமான தார் மாடல் தற்சமயம் 18 நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய எஸ்யுவி மாடல் லைப்ஸ்டைல் பிரிவில் அதிக முன்பதிவுகளை கடந்த மாடலாக இருக்கிறது. புதிய தார் மாடல் கன்வெர்டிபில் டாப் வசதி வழங்கப்படும் என மஹிந்திரா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. 



உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News