செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி உணவு செலவு குறித்து வைரலாகும் தகவல்

Published On 2021-06-24 05:01 GMT   |   Update On 2021-06-24 15:23 GMT
பிரதமர் நரேந்திர மோடி உணவுக்காக செலவிடும் தொகை அரசு கணக்கில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ. 100 கோடியை உணவுக்காக மட்டுமே செலவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த தொகை அரசு கஜானாவில் இருந்தே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் வைரல் தகவல்களை உறுதிப்படுத்தும் செய்தி குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. பொதுவாக பிரதமர் மோடி குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பெரும்பாலான செய்திகளில் பரவலாக வெளியாகும். 



பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் வைரல் தகவல்களை நிரூபிக்கும் பதிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. பொதுவாக பிரதமர் மோடி குறித்த தகவல் அறியும் உரிமை சட்ட விளக்கங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் செலவீனங்கள் குறித்த கேள்விக்கான பதில் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

இதில் பிரதமர் மோடி தனது உணவுக்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் இவரின் உணவு செலவீனங்கள் அரசு கணக்கில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி உணவுக்காக ரூ. 100 கோடி செலவிடவில்லை என உறுதியாகிவிட்டது.  

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
Tags:    

Similar News