ஆன்மிகம்
ரெங்கநாதர்

நாமக்கல் ரெங்கநாதர் கோவிலில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-17 04:09 GMT   |   Update On 2020-12-17 04:09 GMT
நாமக்கல் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டும் வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கோவில் நிர்வாகம் சார்பில் வலைதளத்தில் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து ஆஞ்சநேயர் கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாத நபர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

பக்தர்கள் தரிசனம் செய்ய http://www.namakkalnarasimhaswamianjaneyartemple.org/ வலைதள முகவரியில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத் திலும் தரிசன டோக்கன் நாளை (இன்று) முதல் வினியோகம் செய்யப்படும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆன்லைனில் பதிவு செய்த 750 பக்தர்கள், டோக்கன் பெற்ற 750 பேர் என மொத்தம் 1,500 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர் கள், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தை கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண் டும். பக்தர்கள் உடல்வெப்ப நிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்னர் தான் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள்.

பாதுகாப்பு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு குங்குமம், மஞ்சள், விபூதி, தீர்த்தம் மற்றும் பூ உள்ளிட்ட இதர பிரசாதங்கள் வழங்கப்பட மாட்டாது. பக்தர்களும் தேங்காய், பூ, பழம் மற்றும் இதர பூஜை சாமான்கள் கொண்டுவர அனுமதி இல்லை. கோவில் விழாக்கள் பக்தர்கள் காணும் வகையில் வலைதளத்தில் ஒளிபரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News