செய்திகள்
மண் விளக்குகள் விற்பனைக்கு இருப்பதை படத்தில் காணலாம்.

சேவூரில் கார்த்திகை தீபவிளக்கு விற்பனை மும்முரம்

Published On 2020-11-20 23:32 GMT   |   Update On 2020-11-20 23:32 GMT
சேவூரில் கார்த்திகை தீப விளக்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
சேவூர்:

கார்த்திகை மாதம் என்றாலே தீப திருநாள் மாதம் என ஆன்மிக சான்றோர்களும், பெரியவர்களும் கூறுவார்கள். தற்போது கார்த்திகை மாதம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபதிருநாள் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபதிருநாளில் பயன்படுத்தப்படும் மண் விளக்குள் தற்போது சேவூரில் விற்பனைக்கு தயாராக உள்ளது. ஒரு திரி விளக்கு, ஐந்து திரிவிளக்கு, என பல ரகமாக தயாராகி விற்பனைக்கு உள்ளது.

இது குறித்து சேவூரில் மண்பாண்டம் விற்பனை செய்து வரும் கண்ணம்மா, மல்லிக ஆகியோர் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். தற்போது போத்தம்பாளையம், மற்றும் நம்பியூர் அருகே கெடாரை பகுதியில் உறவினர்கள் செய்து தரும் மண்பாண்டங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது கார்த்திகை தீப மாதம் என்பதால் மண் விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளது. சேவூர் மற்றும் அவினாசி சுற்றுவட்டார பகுதி கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் வகையில் 1 லிட்டர் முதல் 5 லிட்டர் தீப எண்ணெய் ஊற்றும் அளவில் பெரிய மண்விளக்குகள் உள்ளன.

வீடுகளில் ஏற்றப்படும் சிறிய மண்விளக்கு விற்பனைக்கு உள்ளது. ஒரு திரி விளக்கு, ஐந்து திரி விளங்கு என தற்போதைய நாகரிகத்திற்கு ஏற்றாற்போல் பலவிதமான வடிவங்களில் விற்பனைக்கு வைத்துள்ளோம். சிறிய விளக்குகள் 6 விளக்கு 10 ரூபாய் முதல் பெரிய விளக்கு ஒன்று 100 ரூபாய் வரையும், டிசைன் விளக்கு 4 விளக்கு 80 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தீப திருநாள் நெருங்க நெருங்க மண்விளக்குகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை இருக்கும். இன்னும் கிராம பகுதியாலும், நகர பகுதிகளில், நாகரிகம் வளர்ந்த காலத்தில் பொதுமக்கள் கார்த்திகை மாதத்தில் பழமை மாறாமல் மண் விளக்கு பயன்படுத்துகிறார்கள். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News