ஆன்மிகம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா தொடங்கியது

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா தொடங்கியது

Published On 2021-02-09 08:04 GMT   |   Update On 2021-02-09 08:04 GMT
வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அகஸ்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் இங்கு வந்து தேவார பதிகங்கள் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 30 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.

இதில் யாழ்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்தி நாதர் பண்டார சன்னதி, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News