ஆட்டோமொபைல்
எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன்

காற்றில் மிதக்கும் உலகின் முதல் பறக்கும் பைக் அறிமுகம்

Published On 2021-10-27 12:54 GMT   |   Update On 2021-10-27 12:54 GMT
ஜப்பானை சேர்ந்த அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் உலகின் முதல் பறக்கும் பைக் மாடலை அறிமுகம் செய்தது.


பறக்கும் கார்கள் உருவாக்கப்படுவதை அனைவரும் அறிவோம். பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார்களின் ப்ரோடோடைப் மாடல் வெளியிட்டுள்ளன. தற்போது ஜப்பானில் உலகின் முதல் பறக்கும் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் வானில் பறப்பது மட்டுமின்றி, காற்றில் மிதக்கவும் செய்யும்.

ஜப்பானை சேர்ந்த அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் பறக்கும் பைக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த பைக் எவ்வாறு இயங்கும் என்பதை விளக்கி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. 



இந்த பறக்கும் பைக் எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பைக் புஜியில் உள்ள பந்தய களத்தில் இயக்கி காண்பிக்கப்பட்டது. எக்ஸ்-டுரிஸ்மோ மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் மொத்தத்தில் 200 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

புதிய எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5.10 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 300 கிலோ எடை கொண்ட எக்ஸ்-டுரிஸ்மோ தொடர்ச்சியாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை பறக்கும். இதன் அதிகபட்ச வேகம் குறித்து அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
Tags:    

Similar News