செய்திகள்
பிரதமர் மோடி

சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்... இஸ்ரேல் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

Published On 2021-06-14 05:07 GMT   |   Update On 2021-06-14 05:07 GMT
இஸ்ரேல் புதிய பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இஸ்ரேல் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட்(49), இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றார். 

இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் புதிய பிரதமருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




இந்நிலையில், இஸ்ரேல் புதிய பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மரியாதைக்குரிய நப்தாலி பென்னட், இஸ்ரேலின் பிரதமர் ஆனதற்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளை நாம் கொண்டாடும் சமயத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை ஆழப்படுத்தவும் எதிர்நோக்கியிருக்கிறேன்’ என கூறி உள்ளார்.
Tags:    

Similar News