செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா

Published On 2020-11-21 19:02 GMT   |   Update On 2020-11-21 19:02 GMT
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொலைகார கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி திணறி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டும். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
Tags:    

Similar News