செய்திகள்
கோப்பு படம்

மழை நீரில் நனைந்த சுவர்களை தொட வேண்டாம் - மின் வாரிய அதிகாரி அறிவுரை

Published On 2019-10-17 12:21 GMT   |   Update On 2019-10-17 12:21 GMT
மழை காலங்களில் நனைந்த சுவர்களை தொட வேண்டாம் என ஈரோட்டில் மின் வாரிய அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடவேண்டாம். உடனே அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின் வாரிய வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.

தண்ணீரில் நனைந்த மின் ஒயர்கள் செல்லும் ஒயரிங்கில் மின் கசிவு இருந்தால் ஈரமான சுவர்களை தொட வேண்டாம். சுவரில் ஈரம் இருப்பின் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து எலக்ட்ரீசனை வரவழைத்து முழுமையாக சரிபார்த்து ஏதேனும் பழுது இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும்.

மேலும் பழுதான வயர்களை தொடக்கூடாது. மழைக்காலத்தில் மின் கம்பங்கள் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News