செய்திகள்
மம்தா பானர்ஜி

அடுத்த வாரம் டெல்லி பயணம்- பிரதமர் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி சந்திக்கிறார்

Published On 2021-11-17 04:52 GMT   |   Update On 2021-11-17 04:52 GMT
எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம், மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிலுவை தொகை குறித்து மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனை, பறிமுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.

இந்த நடவடிக்கைகளை 50 கிலோ மீட்டர் தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக எல்லை பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி அடுத்த வாரம் டெல்லிக்கு செல்கிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம், மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிலுவை தொகை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

மம்தா பானர்ஜி வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை டெல்லியில் இருக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசும் அவர் பின்னர் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.

இந்த தகவலை திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News