செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் மந்திரி சபையில் புதுமுகத்துக்கு வாய்ப்பு இல்லை

Published On 2020-02-13 06:46 GMT   |   Update On 2020-02-13 06:46 GMT
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள கெஜ்ரிவால் மந்திரி சபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அந்த கட்சிக்கு 62 இடங்கள் கிடைத்தது. பா.ஜனதா 8 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்-மந்திரியாக வருகிற 16-ந் தேதி பதவி ஏற்கிறார். ராம் லீலா மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக கெஜ்ரிவால் கவர்னர் பைஜாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கெஜ்ரிவால் மந்திரி சபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. பழைய மந்திரிகளே மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


மணிஷ் சிசோடியா துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்.

சத்யேந்திர குமார் ஜெய்ன், கோபால்ராய், இம்ரான் உசேன், ராஜேந்திர பால் கவுதம், கைலாஷ் கெலாட் ஆகியோர் மந்திரிகளாக நீடிப்பார்கள். கெஜ்ரிவாலுடன் 7 பேர் மந்திரிகளாக பொறுப்பு ஏற்பார்கள்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ராஜு சந்தா, அதிஷி ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள்.

புதுமுகங்களான இவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களுக்கு கட்சியில் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று கெஜ்ரிவால் கருதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News