ஆட்டோமொபைல்
எம்ஜி குளோஸ்டர்

அசத்தல் அம்சம் பெறும் எம்ஜி குளோஸ்டர்

Published On 2020-09-17 10:38 GMT   |   Update On 2020-09-17 10:38 GMT
எம்ஜி குளோஸ்டர் மாடலில் அசத்தல் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா தனது குளோஸ்டர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி குளோஸ்டர் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.

தற்போதைய டீசரின் படி புதிய குளோஸ்டர் மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.



எம்ஜி குளோஸ்டர் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தின் அங்கமாக இந்த அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் கொலிஷன் வார்னிங் சிஸ்டம், பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஆட்டோ பார்க் அசிஸ்ட் மற்றும் லேன் டிபாச்சர் வார்னிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News