லைஃப்ஸ்டைல்
கவுனி அரிசி உருண்டை

நார்ச்சத்து நிறைந்த கவுனி அரிசி உருண்டை

Published On 2021-11-19 06:00 GMT   |   Update On 2021-11-19 06:00 GMT
கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி மாவு - 250 கிராம்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

செய்முறை:

கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.

ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

சத்தான கவுனி அரிசி உருண்டை ரெடி.

Tags:    

Similar News