கோவில்கள்
கால பைரவர் கோவில்- அதியமான் கோட்டை

கால பைரவர் கோவில்- அதியமான் கோட்டை

Published On 2022-02-23 04:06 GMT   |   Update On 2022-02-23 04:06 GMT
தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது பைரவர் கோவில். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார்.

9-ம் நூற்றாண்டில் ஏதிரிகளால் நிறைய இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது. அப்பொழுது அதியமான் மன்னரால் வெல்ல முடியாத சூழ்நிலை அப்பொழுது ஆஸ்தான ஜோதிடர்கள் காலபைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் கூறினர். தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறினர்.

அவர்கள் சொன்னதற்கு இனங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார்.
இந்த வரலாற்றின் செயல்கள் அனைத்தும் இக்கோவிலில் சிற்ப்ப கலைகளாக உள்ளன. ஆதியமான் மன்னரால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட பின்புதான் மன்னர் போரில் வென்றார். இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.

அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார். இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
Tags:    

Similar News