லைஃப்ஸ்டைல்
கிவி சாண்ட்விச்

நார்ச்சத்து நிறைந்த கிவி சாண்ட்விச்

Published On 2020-07-06 05:22 GMT   |   Update On 2020-07-06 05:22 GMT
கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.
தேவையான பொருட்கள் :

கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.

செய்முறை :

கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.

கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.

தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News