லைஃப்ஸ்டைல்
குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும்.. தடுக்கும் வழிமுறையும்...

குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும்.. தடுக்கும் வழிமுறையும்...

Published On 2021-01-22 08:26 GMT   |   Update On 2021-01-22 08:26 GMT
குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறுகளை அம்மாக்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக அதை திருத்த முடியும். அப்படி குழந்தைகள் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம்.
குழந்தைகள் ஒரு வயதுக்குள்ளாகவே விரல் சூப்பும் பழக்கத்தை கற்றுகொள்கிறார்கள். இதை கவனிக்காமல் இருக்கும் போது இதிலிருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு நான்கு முதல் ஆறு வயது கூட ஆகிவிடுகிறது. குழந்தை எப்போதும் தூங்கும் போதும் கூட விரல் சூப்புவதை நிறுத்துவதில்லை.

குழந்தைக்கு பற்கள் வளரும் வரை அவர்கள் கட்டை விரல் சூப்பும் பழக்கம் கொண்டிருப்பது பிரச்சனையில்லை. ஆனால் அதன் பிறகும் அவர்கள் இதை செய்துவந்தால் பற்கள் வரிசை பாதிக்கப்படும். பல் பிரச்சனையை உண்டாக்கும். வெகு சில குழந்தைகள் தானாக இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் சில குழந்தைகள் பலவிதமான மிரட்டல் தண்டித்தல் போன்றவற்றுக்கு பிறகே விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துகிறார்கள்.

குழந்தைகள் விரல் சூப்பும் போது பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதை தடுக்க குழந்தையை அரவணைத்தப்படி ஒருவர் உடன் இருக்க வேண்டும். குழந்தைக்கு புரியக்கூடிய வயதாக இருந்தால் அதன் விளைவுகள் குறித்து பேசி அவர்களை வேறு திசைக்கு திருப்பலாம். குழந்தைகளை எப்போதும் உங்கள் மீது கவனம் வைக்கும்படி இருக்க செய்தால் இதை ஆரம்ப கட்டட்திலேயே தடுத்து நிறுத்திவிட முடியும்.

​மூக்கில் விரல் விட்டு குடைதல்

எல்லா குழந்தைகளும் கண்டிப்பாக இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு சளி அல்லது சலிப்பு காரணமாக இந்த பழக்கம் உருவாகலாம். சளியை வெளியே எடுக்கும் பழக்கத்தை குழந்தைகள் செய்யும் போது அடிக்கடி விரலை மூக்கு துவாரத்தில் விட்டு நோண்டி கொண்டே இருப்பார்கள். இதனால் சமயத்தில் மூக்கின் உள்ளே விரல்களில் ஒட்டியிருக்கும் கிருமிகள் உள்ளே செல்ல கூடும். அரிதாக மூக்கினுள் ரத்தகசிவும் வருவதற்கான வாய்ப்புண்டு.

எப்படி தடுத்து நிறுத்துவது

சிறு குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மூக்கு குடைதலின் விளைவுகள் புரியாது. அம்மாக்கள் தினமும் குளிப்பாட்டும் போது அந்தரங்க உறுப்பு சுத்தம் சொல்லிதருவது போல் மூக்கை சுத்தம் செய்யும் வழிமுறைகளை கற்றுதந்து தினமும் குளிக்கும் போது இதை செய்தால் போதும் என்று அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டி விரல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்களது மூக்கு காய்ந்து உலர்ந்திருந்தால் மூக்கு ஈரப்பதமாக இருக்க ஈரப்பதமூட்டும் ஜெல் பயன்படுத்தலாம். அவர்கள் விரல்களுக்கு வேலை கொடுத்துகொண்டே இருந்தால் அவர்களது விரல்கள் மூக்கின் அருகே செல்லாது.

​நகம் கடித்தல்

நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பான்மையினரிடம் உள்ளது. மன அழுத்தம் இருக்கும் போது நகம் கடிப்பது உண்டு. வளரும் பருவத்திலேயே இந்த பழக்கத்தை தடுக்காவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகும் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். மன அழுத்தம் அல்லது பதற்றத்தால் இது உருவாவதாக சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் தான் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள் மன அழுத்தம் அவர்களை ஆட்கொண்டிருந்தால் அதை போக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளின் கை விரல் நகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைத்து விடலாம். வளர்ந்தவர்களாக இருந்தால் மன அழுத்தம் குறைக்க முயற்சி செய்வது நல்லது.

குழந்தைகள் சில விஷயங்கள் செய்யும் போது அவர்களுக்கு அது பிடிக்காமல் இருந்தாலோ அல்லது பிடிக்காத நபராக இருந்தாலோ அவர்கள் மீது புகார் சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் வயதை ஒத்த குழந்தைகளிடம் விளையாடும் போது கூட தங்களது தவறை மறைத்து மற்றவர்கள் செய்யும் தவறை மட்டும் மிகைப்படுத்தி சொல்வார்கள். இந்த பழக்கம் பள்ளியிலும் தொடரும். கூடுதலாகவே இருக்கும்.

குழந்தைகள் முன்பு மற்றவர்களை குறை கூறுவதை செய்யாதீர்கள். குழந்தைகள் சண்டையிடும் போது நேரிடையாகவே இருவருக்கும் சமரசம் செய்யுங்கள். பொறுமையும், சமரச குணங்களையும் அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நேர்மறையான சிந்தனைகளையும், நேர்மறையான வாழ்க்கை முறையையும் கற்றுகொடுங்கள்.
Tags:    

Similar News