உள்ளூர் செய்திகள்
மாணவி படித்த பள்ளி

மாணவி தற்கொலை - மதம் சார்ந்த பிரசாரம் செய்யப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அறிக்கை

Published On 2022-01-28 00:15 GMT   |   Update On 2022-01-28 00:15 GMT
கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க. மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
அரியலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (17), கடந்த சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார். ஜனவரி 10-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகாரகள் எதுவும் பெறப்படவில்லை. முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்விஅலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News