செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-08-26 10:39 GMT   |   Update On 2019-08-26 10:39 GMT
நீர்மட்டம் குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

பருவமழை ஏமாற்றியதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் முதல்போக சாகுபடி பாதிக்கப்பட்டது.

கேரளாவில் கன மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி பணிகளை மும்முரமாக தொடங்கி உள்ளனர். அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டதால் பாசனத்திற்கு பயன்படுத்தினர். தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 169 கனஅடி நீரே வந்தது. அணையின் நீர்மட்டமும் 128.55 அடியாக குறைந்துள்ளது.

நேற்று வரை 1650 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை அது 1625 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 51.61 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1125 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. 13 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.96 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 18, தேக்கடி 8.8, கூடலூர் 2.3, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 5.2. வீரபாண்டி 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News