ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 4-ந்தேதி நடக்கிறது

Published On 2021-10-30 05:09 GMT   |   Update On 2021-10-30 05:09 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், கைங்கர்யம் நடக்கிறது. பின்னர் தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

தீபாவளி  ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காண்ட மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கருடாழ்வார் எதிரே வைக்கப்படுகிறார். மலையப்பசாமிக்கு அருகில் மற்றொரு பீடத்தில் சேனாதிபதியான விஸ்வக்சேனரை எழுந்தருள செய்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து மூலவர் ஏழுமலையானுக்கு பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தும், ஆரத்தி காண்பித்தும், பிரசாதம் வழங்கியும் தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்கிறார்கள். மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு சஹஸ்ர தீபலங்கார சேவை நடக்கிறது.

தீபாவளி  ஆஸ்தானத்தால் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News