குழந்தை பராமரிப்பு
சமூகம் ஆட்டிசம் குழந்தைகளை ஒதுக்குகின்றன

சமூகம் ஆட்டிசம் குழந்தைகளை ஒதுக்குகின்றன

Published On 2022-04-09 03:31 GMT   |   Update On 2022-04-09 03:31 GMT
உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளை பற்றி கூறியிருந்தார். கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர்களான பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகியோர் கடந்த 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றிய ஆய்வுகளுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கினார்கள்.

கடந்த 2008-ம் ஆண்டில்தான் ஐ.நா சபையால், ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Tags:    

Similar News