செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் கடந்த மாதம் ரூ.104 கோடி உண்டியல் வசூல்

Published On 2021-04-03 07:48 GMT   |   Update On 2021-04-03 07:48 GMT
திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருகிறது.
திருப்பதி:

கடந்த ஆண்டு கொரோனா பரவலையொட்டி திருப்பதியில் சாமி தரிசனம் நிறுத்தப்பட்டது. பின்னர் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் குறைவான பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் உண்டியல் வருமானமும் குறைவாக இருந்தது. அதன்பின்னர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் சராசரியாக ரூ.3 கோடி உண்டியல் வசூலாகி வருகிறது.

கடந்த மாதம் 16 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் ரூ.104 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.

மேலும் 7 லட்சத்து 84 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 82 லட்சத்து 77 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News